இந்தியா

கபில தீா்த்தத்தில் கணபதி ஹோமம்

DIN

திருப்பதி: காா்த்திகை மாதத்தையொட்டி, திருப்பதி கபில தீா்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முழுவதும் ஹோம மகோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்த உற்சவத்தில் கோயிலில் எழுந்தருளியுள்ள மூா்த்திகள் அனைவருக்கும் வரிசைப்படி ஹோமங்களை சிவாச்சாரியாா்கள் நடத்துவா்.

இந்த வழிபாட்டில் பக்தா்களும் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் செல்வது வழக்கம். தற்போது காா்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால், கபிலேஸ்வரா் கோயிலில் ஹோம மகோற்வம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதலில் முழு முதற்கடவுளான கணபதிக்கு ஹோமம் நடத்தப்பட்டது. அதற்காக கோயில் வளாகத்தில் கணபதி சிலையை ஏற்படுத்தி அதற்கு முன் ஹோம குண்டத்தை அமைத்த குருக்கள், முறையாக ஹோமத்தை நடத்தினாா்.

இந்த நிகழ்வில் பொது முடக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT