முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அடையாளம் தெரியாத வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
3 killed in road accident in UP's Amethi 
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் அடையாளம் தெரியாத வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இங்குள்ள ஜெய்ஸ் காவல் நிலைய பகுதியில் உள்ள லோஹியா பாலம் அருகே புதன்கிழமை மாலை இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

இருசக்கரவாகனத்தில் சென்ற மூன்று பேர் - பைத்யநாத் சரோஜ் (60), ராஜேஷ் சரோஜ் (19), நீரஜ் சுக்லா (20) ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்து புர்சத்கஞ்சில் உள்ள சமூக சுகாதார மையத்திற்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சுகாதார மையத்திற்குக் கொண்டுவந்தபோது அவர்கள் மூவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.