முகப்பு
இந்தியா

செயலி மூலம் 67% சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள்: தில்லி சுகாதாரத்துறை

பசுமை தில்லி (கிரீன் தில்லி) செயலி மூலம் இதுவரை 67 சதவிகித சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள் பதிவாகியுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
செயலி மூலம் 67% சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள்: தில்லி சுகாதாரத்துறை (கோப்புப்படம்)
பகிர்:

பசுமை தில்லி (கிரீன் தில்லி) செயலி மூலம் இதுவரை 67 சதவிகித சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள் பதிவாகியுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பொதுமக்கள் நேரடியாக அரசுக்கு புகாரளிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி பசுமை தில்லி (கிரீன் தில்லி) என்ற செயலியை தில்லி அரசு அறிமுகம் செய்தது.

இதில் இதுவரை 6,963 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 4,761 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, வடக்கு தில்லி மாநகராட்சி பகுதியில் அதிக அளவிலான சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள் பதிவாகியுள்ளன. புகாரில் அதிக அளவாக குப்பைக் கொட்டுதல், பிளாஸ்டிக் பொருள்களை எரித்தல் போன்ற புகார்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.

செயலியில் வரும் புகார்கள் அனைத்தும் தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையத்தின் உதவியுடன் அந்தந்த துறையைச் சேர்ந்த மண்டல அதிகாரிகள் மூலம் சரிசெய்யப்படுகின்றன.

தில்லி தலைமைச் செயலகத்தில் மூத்த விஞ்ஞானி மோகன் ஜார்ஜ் மற்றும் பி.எல். சாவ்லா தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 10 பேர் அடங்கிய குழு சுற்றுச்சூழல் மாசு மற்றும் கட்டுப்பாடு குறித்து கண்காணித்து வருகிறது. மேலும் பசுமை தில்லி செயலியில் வரும் புகார்களையும் கண்காணித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →