முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் பள்ளிகள் திறப்பு: 83 மாணவர்கள், 8 ஆசிரியர்களுக்கு கரோனா

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின், ஹரியாணாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 83 மாணவ, மாணவிகளுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 19 நவம்பர், 2020 at 12:55 PM
ஹரியாணாவில் பள்ளிகள் திறப்பு: 83 மாணவர்கள், 8 ஆசிரியர்களுக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM


ரேவரி: கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின், ஹரியாணாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 83 மாணவ, மாணவிகளுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா என்று ஆய்வு செய்யுமாறு மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று ஜிந்த் மாவட்டத்தில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. ரேவாரி மாவட்டத்தில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில் 72 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்று என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காலமானதால், பள்ளி மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 12 பள்ளிகளின் மாணவர்களுக்கு சோதனை செய்ததில் 72 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ரேவரி மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.