மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,535 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) 5,535 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) 5,535 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 5,535 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,63,055 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,860 பேர் குணமடைந்துள்ளனர், 154 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,35,971 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 46,356 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 79,738 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.