47-வது நாள் : பாதிக்கப்பட்டோரைவிட குணமடைந்தோர் அதிகம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா மொத்த பாதிப்பில் இது 5 சதவீதமாகும்.
புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா மொத்த பாதிப்பில் இது 5 சதவீதமாகும்.
தொடர்ந்து 47-வது நாளாக புதிதாக நோயிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை, புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போது நாட்டில் 4,43,303 பேர் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.95 சதவீதமாகும்.
நோயிலிருந்து குணமடைந்தோர் வீதம் இன்று 93.58 சதவீதமாக பதிவாகியுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 83,83,602 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 79,40,299 ஆக உள்ளது.
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 79.49 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.