தெலங்கானாவில் மேலும் 1,058 பேருக்கு கரோனா பாதிப்பு
தெலங்கானாவில் இன்று மேலும் 1.058 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,6 லட்சமாக உயர்ந்துள்ளது.
தெலங்கானாவில் இன்று மேலும் 1.058 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,6 லட்சமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி, புதிதாக 1,058 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவாகியிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆயிரத்தைக் கடந்துள்ளது.
Advertisement
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 12,682 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாட்டில் மொத்த பரிசோதனைகள் 50 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதிதாக 4 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,419-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.54-ஆக பதிவாகியுள்ளது. தேசிய அளவோடு ஒப்பிடும்போது 1.5 சதவிகிதமாக உள்ளது. தெலங்கானாவில் மீட்பு விகிதம் 94.59 ஆக உள்ளது.