முகப்பு
இந்தியா

ஹைதராபாத் தேர்தல்: பாஜகவிற்காக போட்டியிலிருந்து விலகிய பவன்கல்யாண்

நடைபெற உள்ள ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண் அறிவிக்கப்பட்ட தனது வேட்பாளர்களைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண்
பகிர்:

நடைபெற உள்ள ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண் அறிவிக்கப்பட்ட தனது வேட்பாளர்களைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசியத் தலைவர் கே.லக்‌ஷ்மண் உடனான சந்திப்புக்குப் பின் பவன்கல்யாண் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மற்றும் ஹைதராபாத்தின் நலன்களுக்காக போட்டியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பவன்கல்யாண் தனது கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.