முகப்பு
இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் திருப்பி தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுக்கிறது. 

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர், ரஜெளரி மாவட்டத்தின் நெளஷேராா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவ வீரா்கள் தக்க பதிலடி கொடுத்தனா்.

இந்த துப்பாக்கிச் சண்டையால் எல்லையோர கிராம மக்கள் பீதியும் பதற்றமும் அடைந்தனா். முன்னதாக இதேபகுதியில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.  

முழு கட்டுரையைப் படிக்க →