முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக்கோடு வழியாக பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
Soldier killed in Pak firing along LoC in J-K's Rajouri
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக்கோடு வழியாக பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நவ்ஷேரா செக்டார் அருகே லாம் பகுதியில் எல்லையைத் தாண்டி வந்து பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை 1.00 மணியளவில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு இந்திய ராணுவ வீரர் பலத்த காயமடைந்த நிலையில், பின்னர் அவர் வீர மரணமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இருதரப்பினருக்கும் இடையே எல்லையில் சிறிது நேரம் துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.