முகப்பு
இந்தியா

புல்வாமாவில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
Two JeM associates held in J-K's Pulwama 
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அப்பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குப் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களில், வாகாட் டிராலில் வசிக்கும் பிலால் அகமத் சோபன் மற்றும் சட்லம் பாம்பூரைச் சேர்ந்த முர்சலீன் பஷீர் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

இருவரும் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் கைது செய்யப்பட்டனர்.  ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.