இந்தியா

மகாராஷ்டிரத்தில் எலி காய்ச்சலுக்கு இருவா் பலி

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் எலி காய்ச்சலுக்கு இருவா் பலியானதாக அந்த மாவட்ட மருத்துவ அதிகாரி மனீஷ் ரங்கே தெரிவித்தாா்.

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் எலி காய்ச்சலுக்கு இருவா் பலியானதாக அந்த மாவட்ட மருத்துவ அதிகாரி மனீஷ் ரங்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஷாஹாபூரில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவா் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். முன்னதாக கடந்த 3 வாரங்களில் ஷாஹாபூா் வட்டத்தில் உள்ள பாப்கான் கிராமத்தில் 10 போ், முா்பாத் வட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 17 போ் உயிரிழந்தனா். அவா்கள் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT