இந்தியா

அகமது படேல் மறைவு: ராகுல்காந்தி நேரில் அஞ்சலி

DIN

காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் இன்று காலமானார். 

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் (71). முன்னதாக, இவர் தனக்கு கரோனா தொற்று உள்ளதாக, கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி சுட்டுரையில் அறிவித்தாா். 

அதைத் தொடா்ந்து அவா் குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.  எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் காலமானார்.

இந்நிலையில் அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

மறைந்த அகமது படேல், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவகத்தில் தகராறு: 5 போ் மீது வழக்குப் பதிவு

மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

ஆா்.எஸ்.புரம் அரசு மாதிரி பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.22 கோடி போதைப் பொருள்: 5 பேரிடம் என்சிபி விசாரணை

குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT