நிவர் புயல்: சித்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
நிவர் புயல் ஆந்திரந்திர மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவர் புயல் ஆந்திரந்திர மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு வங்கக்கடலில் கடந்த சனிக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அடுத்தடுத்து வலுவடைந்து செவ்வாய்க்கிழமை காலையில் "நிவர்' புயலாகவும், அன்று இரவில் தீவிர புயலாகவும் மாறியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரிக்கும் மரக்காணத்துக்கும் இடையே வியாழக்கிழமை அதிகாலை 3.48 மணிக்கு கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்தது. சென்னையிலும் இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயல் ஆந்திரந்திர மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக சித்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ததுடன் 65 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியது.
இதனால் சித்தூரில் பல்வேறு வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. எனவே, தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 7,772 பேர் வெளியேற்றப்பட்டு 111 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பபினும், தற்போது அங்கு நிலைமை சீராக உள்ளது என்றும் நிவர் புயலால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆந்திரத்தில் உள்ள 2000 மண்டலங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளனர்.