முகப்பு
இந்தியா

ஒடிசாவில் குறைந்துவரும் கரோனா: பாதிப்பு 594, பலி 14

ஒடிசாவில் கடந்த சில நாள்களாக கரோனா தாக்கம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
ஒடிசாவில் குறைந்துவரும் கரோனா: பாதிப்பு 594, பலி 14
பகிர்:

ஒடிசாவில் கடந்த சில நாள்களாக கரோனா தாக்கம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 594 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,239-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டதில், 343 பேர் பல்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்தும், மற்ற பாதிப்பு உள்ளூரிலும் கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றால் 6,629 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்துக் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 3,08,839 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 14 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,718-ஆக அதிகரித்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் இதுவரை 57.77 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,980 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.