ராஜ்கோட் மருத்துவமனை தீ விபத்து: வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கரோனா மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 5 நோயாளிகள் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்றம், வேதனையை வெளிப்படுத்தியுள்ள
இந்தியாராஜ்கோட் மருத்துவமனை தீ விபத்து: வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கரோனா மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 5 நோயாளிகள் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்றம், வேதனையை வெளிப்படுத்தியுள்ள
புது தில்லி: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கரோனா மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 5 நோயாளிகள் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்றம், வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.
"இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் நிச்சயம் இது ஒரு முதல் சம்பவமாக இருக்காது. எனவே, இதனை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்கிறோம்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
கரோனா மருத்துவமனையில் நிகழும் முதல் சம்பவமல்ல இதுவென்றும், இது தொடர்பாக முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் நிகழும் தீவிபத்துகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ராஜ்கோட் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.