முகப்பு
இந்தியா

காங்கிரஸ் பொருளாளராக பவன் குமார் பன்சால் நியமனம்

​அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சாலை நியமித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
கோப்புப்படம்
பகிர்:


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சாலை நியமித்துள்ளார்.

காங்கிரஸ் பொருளாளராக இருந்த அகமது படேல் கடந்த 25-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இடைக்கால நடவடிக்கையாக பவன் குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே கட்சியின் நிர்வாகப் பொறுப்பை வகிக்கும் பன்சாலுக்கு கூடுதல் பொறுப்பாக பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.