இந்தியா

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்: 51.76% வாக்குகள் பதிவு

DIN

ஜம்மு-காஷ்மீரின் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அந்த யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 

இதில் 140 இடங்கள் ஜம்முவிலும், எஞ்சிய 140 இடங்கள் காஷ்மீரிலும் உள்ளன. முதல்கட்டமாக ஜம்முவில் 18 இடங்கள், காஷ்மீரில் 25 இடங்கள் என மொத்தம் 43 இடங்களுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 

அதில், ஜம்முவில் 64.2% வாக்குகளும், காஷ்மீர் பகுதியில் 40.65% வாக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 280 இடங்களுக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT