முகப்பு
இந்தியா

உ.பி.யில் துணைமின்நிலையம் முற்றுகை; 58 பேர் மீது வழக்கு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்விநோயோகத் தடியை கண்டித்து துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டபோது காவல்துறையினரை தாக்கிய 58 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்விநோயோகத் தடியை கண்டித்து துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டபோது காவல்துறையினரை தாக்கிய 58 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் நிகோஹி அருகே உள்ள ஹம்சாபூர் கிராமத்தில் நேற்று இரவு மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரத்திற்கு மின்சாரம் தடைப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நிஹோகி பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள், பின்னர் காவல்நிலையம் சென்று புகார் அளித்து சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்றதால், பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் பின்னர் மோதலாகவும் மாறியது. இதில் நான்கு காவல்துறையினர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு காவலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட 58 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.