அதிகரிக்கும் கரோனா பாதிப்பால் கேரளத்தில் 5 பேருக்கு மேல் கூடத் தடை
கேரளத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கேரளத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தொடக்கத்தில் கரோனா தொற்று பாதிப்புகளை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதால் உலக அளவில் கேரள மாநிலம் சிறப்பு கவனம் பெற்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கேரளத்தில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 8135 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானது.
இதனைத் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க புதியக் கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதம் இறுதி வரை மாநிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கும் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட நிலைமைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவைப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கேரளத்தில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 242 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.