இந்தியா

மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவைச் சிகிச்சை

DIN

மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவருடைய மகன் சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

தேசிய அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக ஈடுபட்டு வரும் 74 வயதாகும் ராம் விலாஸ் பாஸ்வான், நாட்டின் குறிப்பிடத்தக்க தலித் தலைவா்களில் ஒருவா். லோக் ஜனசக்தி கட்சித் தலைவராக இருக்கும் இவா், இப்போது மோடி தலைமையிலான பாஜக அரசில் மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக இருந்து வருகிறாா்.

அண்மையில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவருடைய உடல்நிலை குறித்து அவருடைய மகன் சிராக் பாஸ்வான், தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு சனிக்கிழமை மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவருக்கு இதய அறுவைச் சிக்ச்சை செய்யப்பட்டது. உடல்நிலை காரணமாக கட்சிக் கூட்டங்கள் அனைத்தையும் அவா் ரத்து செய்துள்ளாா். தேவைப்பட்டால், அடுத்த சில வாரங்களில் அவருக்கு மேலும் ஓா் அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ள மருத்துவா்கள் திட்டமிட்டுள்ளனா் என்று அந்தப் பதிவில் அவா் கூறியுள்ளாா்.

பாஸ்வானின் உடல் நிலை குறித்து பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் பல மூத்த தலைவா்கள் சிராக் பாஸ்வானிடம் கேட்டறிந்ததாக லோக் ஜனசக்தி கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT