நோபல் பரிசு அறிவிப்பு: இன்று தொடக்கம்
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஒவ்வொரு துறையாக இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஒவ்வொரு துறையாக இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் இன்று (அக்.5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகிறது. இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு அடுத்ததடுத்த தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.