இந்தியா

என்-95 முகக்கவசம்ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் தளா்வு

DIN


புது தில்லி: என்-95 முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தளா்த்தியது. முன்னதாக, கரோனா பரவல் காரணமாக உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு என்-95 உள்ளிட்ட முகக் கவசங்கள், தனிநபா் பாதுகாப்பு உடைகள், முக்கிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தகத் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘என்-95, எஃப்எஃப்பி2 முகக்கவசங்கள் மற்றும் அவற்றுக்கு இணையான முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுகின்றன. அனைத்து வகையான முகக்கவசங்களையும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்’ என்று கூறப்பட்டது.

முன்னதாக, மாதம்தோறும் 50 லட்சம் என்-95, எஃப்எஃப்பி2 முகக்கவசங்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனை ஏற்பவா்களுக்கு மட்டுமே ஏற்றுமதி உரிமம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று அகில இந்திய முகக்கவசம் தயாரிப்பாளா்கள் சங்கம் கடந்த மாதம் வலியுறுத்தியது. ‘இந்தியாவில் மாதந்தோறும் 20 கோடி என்-95 முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வெறும் 50 லட்சம் மட்டும் மாதம்தோறும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது உற்பத்தியாளா்களுக்கு பாதகமானது’ என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT