ஒரு மாதத்துக்குப் பின் 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கரோனா நோயாளிகள்
கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாள்களாக 10 லட்சத்துக்கும் கீழ் இருந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பின் இன்று முதல் முறையாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது.
புது தில்லி: கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாள்களாக 10 லட்சத்துக்கும் கீழ் இருந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பின் இன்று முதல் முறையாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது.
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நாட்டில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8.97 ஆக இருந்த நிலையில், ஒரு மாத காலத்துக்குப் பின் இன்று கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8.93 லட்சமாகக் குறைந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் மக்கள் தொகைக்கு 140 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையை நிறைவேற்றும் வகையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் செயல்படுகிறது.
Advertisement
மற்றொரு சாதனையாக 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் மக்கள் தொகைக்கான பரிசோதனையின் தேசிய சராசரி 865 ஆக உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 11.68 லட்சம் (11,68,705)பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 8.46 கோடியாக அதிகரித்துள்ளது.
கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாள்களாக 10 லட்சத்துக்கும் கீழ் இருந்த நிலையில் இன்று 9 லட்சத்துக்கும் கீழ குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.