மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்குத் தலைவர்கள் அஞ்சலி

மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர  மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

DIN

தில்லி: மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர  மோடி, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

லோக் ஜனசக்தியின் நிறுவனர் - தலைவரும் மத்திய நுகர்வோர் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானுக்கு,  கடந்த சில நாள்களுக்கு முன்பு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (வியாழக்கிழமை) பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து இன்று காலை அவரது உடல், எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து தில்லி ஜன்பாத்திலுள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் பாஸ்வான் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அவருடைய உடல், சொந்த ஊரான பாட்னாவிற்குக் கொண்டு செல்லப்படுகிறது. நாளை சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்  மறைவையொட்டி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT