வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மராட்டிய சமுதாயத்தினர் போராட்டம்
மகாராஷ்டிரத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மராட்டிய சமுதாயத்தினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மராட்டிய சமுதாயத்தினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரத்திலுள்ள மராட்டிய சமுதாயத்தினருக்கு சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் சட்டம், 2018-ன் படி, கல்வி மற்றும் அரசு வேலைகளில் வாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.
எனினும் இதுவரை வேலைவாய்ப்பிலுள்ள ஒடஒதுக்கீடு எண்ணிக்கை அல்லது சதவிகிதம் குறித்து மகாராஷ்டிர அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே அக்டோபர் 11-ஆம் தேதி மகாராஷ்டிர பொதுசேவை ஆணையத் தேர்வு நடைபெறவுள்ளது. எனினும் இதுவரை இடஒதுக்கீடு குறித்து எந்த தகவலையும் வெளியிடாததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மராட்டியப் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மகாராஷ்டிரத்தின் உஸ்மானாபாத் பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில் அருகேயும், பர்லீன் பீட் மாவட்டத்திலும் மராட்டியப் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிர பொதுசேவை ஆணையத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.