அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையொட்டி அவர் பொறுப்பு வகித்த துறையின் பணிகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூடுதலாக கவனித்துக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். சில தினங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சையில் இருந்த பஸ்வான் வியாழக்கிழமை புதுதில்லியில் காலமானார்.
இந்நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் பொறுப்பு வகித்து வந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பணிகளை கூடுதலாக அமைச்சர் பியூஷ் கோயல் கவனித்துக் கொள்வார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பியூஷ் கோயல் ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.