முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற இருந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற இருந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக தேர்வை ஒத்திவைக்கக்கோரி கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பை மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். “பல்வேறு மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மேலும் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →