பிகார் தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டியிட வாய்ப்பு
நடைபெற உள்ள பிகார் தேர்தலில் சிவசேனா கட்சி 50 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
இந்தியாபிகார் தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டியிட வாய்ப்பு
நடைபெற உள்ள பிகார் தேர்தலில் சிவசேனா கட்சி 50 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள பிகார் தேர்தலில் சிவசேனா கட்சி 50 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ல் தொடங்கும் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் எதிர்வரும் பிகார் சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா கட்சி 50 இடங்களிலிருந்து போட்டியிடலாம் என்றும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.