10 அர்ச்சகர்களுக்கு கரோனா: பத்மநாபசுவாமி திருக்கோயில் மூடப்பட்டது
கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருக்கோயில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயில் மூடப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருக்கோயில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயில் மூடப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர்கள் 10 பேருக்கும், இரண்டு ஊழியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பத்மநாபசுவாமி திருக்கோயில் அக்டோபர் 15-ம் தேதி வரை மூடப்பட்டது.
தினந்தோறும் கோயில் பூஜைகள் தாந்திரிகளால் செய்யப்படும் என்றும், பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திருக்கோயில், ஆகஸ்ட் 27-ம் தேதிதான் திறக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 665 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, ஒரே நேரத்தில் 35 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல முடியும் என்று பல கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அர்ச்சகர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயில் மூடப்பட்டது.