உ.பி.: மர்ம நபர்களால் இளம் விவசாயி சுட்டுக் கொலை
உத்தரப்பிரதேசத்தில் சொந்த நிலத்தில் இளம் விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாஉ.பி.: மர்ம நபர்களால் இளம் விவசாயி சுட்டுக் கொலை
உத்தரப்பிரதேசத்தில் சொந்த நிலத்தில் இளம் விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சொந்த நிலத்தில் இளம் விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஜ் மாவட்டத்திலுள்ள தாசிப்பூர் கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்திர கிஷோர் ராஜ்புட் என்பவர் தமது சொந்த நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் சிலரால் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அப்பகுதியை சேர்ந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாயியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கூட காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை.
இதனிடையே உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தை கன்னுஜ் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி., சுப்ரத் பாதக் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
23 வயதுடைய இளம் விவசாயி சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.