ஆந்திரத்தில் அக்.12-இல் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 12ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வ்ய் மையம் சனிக்கிழமை தெரிவித்தது.
ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 12ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வ்ய் மையம் சனிக்கிழமை தெரிவித்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியின் யானம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 12ஆம் தேதி கனமழை முதல் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் தெலங்கானா மாநிலம், கர்நாடக மாநிலத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இரு தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.