உ.பி.: வரதட்சிணைக் கொடுமையால் மனைவி கொலை
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சிணைக் கொடுமையால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாஉ.பி.: வரதட்சிணைக் கொடுமையால் மனைவி கொலை
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சிணைக் கொடுமையால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சிணைக் கொடுமையால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் படான் பகுதியில் ராம்பரான் என்பவருக்கும், பர்வேஷ் குமாரி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தின்போது ராம்பரான் வீட்டிற்கு 6 லட்ச ரூபாய் வரதட்சிணையாக வழங்கப்பட்டுள்ளது. எனினும் திருமணமான சில மாதங்களில் மேலும் இரண்டு லட்சம் கேட்டு ராம்பரான் அடிக்கடி தமது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று சனிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவன் 23 வயதான தமது மனைவி பர்வேஷ் குமாரியை கொலை செய்துள்ளார்.
இது குறித்து பர்வேஷ் குமாரியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவானக் கணவனைத் தேடிவருகின்றனர்.