முகப்பு
இந்தியா

மும்பையில் மின்தடை; பொதுமக்கள் கடும் அவதி!

இன்று காலை முதல் ஏற்பட்ட மின்தடையால் மும்பை மாநகரமே ஸ்தம்பித்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

இன்று காலை முதல் ஏற்பட்ட மின்தடையால் மும்பை மாநகரமே ஸ்தம்பித்தது. 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை 10 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாலை 5 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு வராததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் மின்சார ரயில்கள் ஸ்தம்பித்து நின்றன.

கல்வா-பட்கே மின்நிலையத்தின் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தானே மற்றும் மும்பைக்கு இடையிலான பகுதிகள் மின்வெட்டை சந்தித்து வருவதாகவும் ஊழியர்கள் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் மின் இணைப்பு துண்டிப்பு சரி செய்யப்படும் என்றும்  மகாராஷ்டிர மின்சாரத்துறை அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்தார். 

மின் தடையால் மும்பையில் பல்வேறு சேவைகள் முடங்கியுள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் ஒரு சில இடங்களில் மின் இணைப்பு சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின் இணைப்பு துண்டிப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →