முகப்பு
இந்தியா

உ.பி.யில் தலித் முதியவரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்புர் பகுதியில் 65 வயதான தலித் முதியவர் மற்றும் அவரது மகனை அடித்துத் துன்புறுத்தி கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
உ.பி.யில் தலித் முதியவரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது
பகிர்:


லலித்புர்: உத்தரப்பிரதேச மாநிலம் லலித்புர் பகுதியில் 65 வயதான தலித் முதியவர் மற்றும் அவரது மகனை அடித்துத் துன்புறுத்தி கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் முக்கிய குற்றவாளியை கைது செய்திருக்கும் காவல்துறையினர், மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறது.

ரோடா கிராமத்தைச் சேர்ந்த அமர் என்பவர் அளித்த புகாரில், சோனு யாதவ் சில நாள்களுக்கு முன்பு தன்னை, சிறுநீரைக் குடிக்குமாறு துன்புறுத்தினார். நான் மறுக்கவே, அவர் என்னை தடியால் அடித்தார். அப்போது அதைத் தடுக்க வந்த மகனையும் அடித்துக் கொடுமைப்படுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் குற்றவாளிகளை தேடி வந்த காவல்துறை, முக்கியக் குற்றவாளியை கைது செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.