பிகார் தேர்தலில் கூட்டணியா?: சிவசேனா விளக்கம்
பிகார் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
இந்தியாபிகார் தேர்தலில் கூட்டணியா?: சிவசேனா விளக்கம்
பிகார் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
பிகார் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ல் தொடங்கும் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் எதிர்வரும் பிகார் சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் பாட்னா செல்ல உள்ளதாக தெரிவித்த சஞ்சய் ரெளத், அங்கு மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.