ஆந்திரத்துக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது
விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்காக நகர்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆந்திர கடற்கரைக்கு அருகே காக்கிநாடாவில் கரையைக் கடந்தது.
விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்காக நகர்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆந்திர கடற்கரைக்கு அருகே காக்கிநாடாவில் கரையைக் கடந்தது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடைசி 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு அருகே கரையை கடந்தது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு கரையை கடந்த போது மணிக்கு 55 கிமீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது, ஆந்திர மாநில கடற்கரையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்தது. தெற்கு ஒடிசா மற்றும் தெலங்கானாவிலும் மிதமான மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, அக்டோபா் 14 ஆம் தேதி வரை குமரி கடல், மன்னாா் வளைகுடா, அந்தமான் கடல், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் மணிக்கு சுமாா் 50 முதல் 60 கி.மீ. வேகத்துடன் சூறாவளி வீசக்கூடும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.