மேற்கு வங்கத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 3 பேர் காயம்
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 81-இல் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியாகினர்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 81-இல் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்ததாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இந்த விபத்து வியாழக்கிழமை இரவு சஞ்சோல் துணைப்பிரிவில் உள்ள ஸ்ரீபூர் மிலன்பள்ளி பகுதியில் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் இறந்தவர்களில் இருசக்கர வாகனத்தில் ஒருவரும். ஆட்டோவில் மூன்று பேரும் பயணித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.