முகப்பு
இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா உறுதி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர்,   “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். கடந்த நாள்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.  

முழு கட்டுரையைப் படிக்க →