இந்தியா

ஹாத்ரஸ்: மதச்சார்பற்ற இயக்கம் சார்பில் மும்பையில் போராட்டம்

DIN

ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி மதச்சார்பற்ற இயக்கம் சார்பில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மும்பையில் மதச்சார்பற்ற இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும், ஹாத்ரஸில் பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை புறநகர் பகுதியான காட்கோபர் பகுதியில் போராட்டக்காரர்கள் ஹாத்ரஸ் விவகாரத்தை எதிரொலிக்கும் வகையில் ஓவியங்களை வரைந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் ஹாத்ரஸ்  விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT