ஹாத்ரஸ்: சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நிறைவு
சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ஹாத்ரஸ் வழக்குக் குறித்த விசாரணையை நிறைவு செய்திருப்பதாகவும், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்
இந்தியாஹாத்ரஸ்: சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நிறைவு
சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ஹாத்ரஸ் வழக்குக் குறித்த விசாரணையை நிறைவு செய்திருப்பதாகவும், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்
ஹாத்ரஸ்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ஹாத்ரஸ் வழக்குக் குறித்த விசாரணையை நிறைவு செய்திருப்பதாகவும், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை, முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த 7-ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், மேலும் 10 நாள்கள் அவகாசம் அளித்து யோகி ஆதியத்நாத் உத்தரவிட்டதை அடுத்து, இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் கிராமத்தில் 19 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான சம்பவம் குறித்து விசாரனை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து செப்டம்பர் 30-ம் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டார்.