முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் காவலர்களிடையே கரோனா தொடர்ந்து அதிகரிப்பு

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 118 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
மகாராஷ்டிரத்தில் காவலர்களிடையே கரோனா தொடர்ந்து அதிகரிப்பு (கோப்புப்படம்)
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 118 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

கரோனா தொற்றால் மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 118 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 25,527-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து  23,300 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,960 காவலர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனாவால் புதிதாக 2 காவலர்கள் உயிரிழந்த நிலையில், இதுவரை  கரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 267-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.