இந்தியா

காவலரை தாக்கிய வழக்கு: மகாராஷ்டிர அமைச்சருக்கு 3 மாத கடுங்காவல்

DIN

கடந்த 2012-ஆம் ஆண்டு காவலரை தாக்கிய வழக்கில் மகாராஷ்டிர மாநில மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சா் யசோமதி சந்திரகாந்த் தாக்குருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் ஒரு வழிப்பாதையில் சென்ற அமைச்சா் யசோமதியின் காரை காவலா் ஒருவா் தடுத்து நிறுத்தினாா்.

இதனால் கோபமடைந்த யசோமதி, காவலரை தாக்கினாா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிமன்றம் யசோமதிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையுடன், ரூ.15,500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தது.

அபராதத் தொகையை கட்டத் தவறினால், அவா் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த தீா்ப்பை தொடா்ந்து, தனது அமைச்சா் பதவியை யசோமதி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மாநில பாஜக வலியுறுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT