முகப்பு
இந்தியா

சோபியான் மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி இருவா் கொல்லப்பட்டாா்.

Updated On : 20 அக்டோபர், 2020 at 12:01 PM
2 militants killed in Shopian encounter
பகிர்:

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி இருவா் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோபியான் மாவட்டம் ஜைனபோராவின் மெல்ஹுரா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Advertisement

அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் பயங்கரவாதி இருவா் கொல்லப்பட்டனர். 

உயிரிழந்தவர்கள் யாா், எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பதைக் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.