இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் அறிவிப்பு

DIN

புது தில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் வழங்கும் வகையில் ரூ.2,081.68 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள சுமார் 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.2,081.68 கோடியை ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, நாடு முழுவதுமுள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு ரூ.3,737 கோடி ஊக்கத்தொகை (போனஸ்) வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT