முகப்பு
இந்தியா

புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நேரம்: பிகார் தேர்தல் குறித்து சோனியா விடியோ

பிகாரில் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி விடியோ மூலம் வாக்கு சேகரித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:


பிகாரில் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி விடியோ மூலம் வாக்கு சேகரித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தின் மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என சோனியா காந்தி வாக்கு சேகரித்துள்ளார்.

இதுபற்றி விடியோ மூலம் அவர் தெரிவித்துள்ளதாவது:

"ஆளும் கட்சி அதிகாரத்தின் ஆணவத்தில் உள்ளது. அவர்களது பாதையிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர். அவர்களுடைய செயல்பாடுகளும், கருத்துகளும் சிறப்பாக இல்லை. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் கடுமையான காலத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

வரும் தலைமுறையினரின் நலனைக் கருத்தில்கொண்டு, புதிய பிகாரைக் கட்டமைக்க மக்கள் தயாராகிவிட்டனர். மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. மாற்றம் புதிய சிந்தனையையும், புத்துணர்ச்சியையும் தரும். புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது.

பிகார் மக்கள் மெகா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்."

முழு கட்டுரையைப் படிக்க →