பிகார் முதற்கட்ட தேர்தலில் முற்பகல் வரை 18% வாக்குப்பதிவு; 75 இயந்திரங்களில் கோளாறு
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி 18.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி 18.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகாரில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் 75 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.
அர்வால், கயா, நவாடா மாவட்டங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக, வாக்களிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் வாக்களிக்காமலேயே பொதுமக்கள் திரும்பிச் செல்வதையும் காண முடிந்தது.
சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு அரை மணி நேரம் முதல் 2 மணி வரை தாமதமாகத் தொடங்கியது.