முகப்பு
இந்தியா

அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் பிரணாப்: அமித் ஷா

அரசியலில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இயங்குவதற்கு பிரணாப் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
அரசியலில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இயங்குவதற்கு பிரணாப் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா
பகிர்:

அரசியலில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இயங்குவதற்கு பிரணாப் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள் கிழமை) மாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

இதனிடையே தில்லி ராஜாஜி மார்க்கில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் பிரணாப் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி மறைந்த நாள் நம் அனைவருக்கும் துக்க நாள் என்று கூறினார். புதிதாக அரசியலுக்கு வர நினைப்பவர்கள் சர்ச்சைகளில் சிக்காமல் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவது குறித்து பிரணாப் முகர்ஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.