சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்: ரயில்வே தகவல்
நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாசிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்: ரயில்வே தகவல்
நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்துவிதமான போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது. எனினும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள், சிறப்பு விமானங்கள் மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் மேலும் பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.