முகப்பு
இந்தியா

புணேவில் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புணேவின் கணேஷ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் காலை 7 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் அருகில் இருந்த குடியிருப்புகளின் சுகவர்கள் இடிந்து விழுந்தன.   
உடனடியாக தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இரவு முழுவதும் எரிவாயு சிலிண்டரின் கசிவு ஏற்பட்டதாகவும், மின்சார விளக்குகள் தொடர்ந்து எரிந்துகொண்டிருந்ததாலும் வெடிவிபத்து ஏற்பட்டதாக காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.